தமிழகத்தைத் தொடர்ந்து நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி, கர்நாடக அரசு சட்டப்பேரவையில் தீர்மானமொன்றைக் கொண்டுவந்துள்ளது.
மாநில அமைச்சரவையில் கொண்டுவரப்பட்ட இத் தீர்மானத்திற்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, ஒப்புதல் அளித்துள்ளார்.
இதேவேளை நீட் விலக்கு கோரி மேற்கு வங்க சட்டமன்றத்திலும் தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு, “தேசிய அளவில் நீட் தேர்வை இரத்து செய்திட வேண்டும்” என்று வலியுறுத்தி கடிதமொன்றை எழுதியிருந்தார்.
அதேபோல், தேசிய அளவில் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நீட் தேர்வை இரத்து செய்ய வலியுறுத்த வேண்டும் என டெல்லி, ஹிமாச்சல், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, பஞ்சாப், தெலுங்கானா, மேற்கு வங்கம் ஆகிய 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.