நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய அரசின் 2024-25ம் நிதியாண்டிற்கான முழுமையான வரவுசெலவுத் திட்டத்தை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்றது. இதன் மூலம் தொடர்ந்து 3வது முறையாக பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சி அமைந்தது.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு 3வது முறையாக அமைந்தபின் தாக்கல் செய்யப்படும் முதல் வரவுசெலவுத் திட்டம் இதுவாகும்.
அந்தவகையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று காலை 11 மணிக்கு வரவுசெலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்யவுள்ளார்.
இன்று தாக்கல் செய்யப்படும் வரவுசெலவுத் திட்டத்தில் வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் மாற்றம் வருமா?, விலைவாசியை கட்டுப்படுத்த, வேலைவாய்ப்புகளை அதிகரிக்க, உள்கட்டமைப்புகளை மேம்படுத்த அறிவிப்புகள் இடம்பெறா? என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
அதேபோல், வளர்ச்சி திட்டங்களுக்கான நிதி விடுவித்தல், ஒப்புதல் வழங்குதல், நிதி ஒதுக்குதல் போன்ற பல்வேறு அறிவிப்புகள் இடம்பெறுமா? என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.