தைவானின் எல்லையில் சீனாவுக்குச் சொந்தமான 8 போர்க்கப்பல்கள் மற்றும் 22 விமானங்கள் பறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இதில் 15 விமானங்கள் எல்லையைத் தாண்டி தைவானுக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடல் மற்றும் வான் எல்லை பகுதியை உன்னித்து கவனித்து வருவதாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தைவான் 1949-ல் தனிநாடாக பிரிந்தது. ஆனால் அதனை மீண்டும் தன்னுடன் இணைத்துக் கொள்ள சீனா மீண்டும் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.