33வது ஒலிம்பிக் போட்டிகள் இன்று (26) பிரான்ஸ் தலைநகர் பரீஸ் நகரில் ஆரம்பமாகவுள்ளது. 100 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக் வரலாற்றில் பிரான்ஸ் நாட்டில் ஒலிம்பிக் போட்டிகள் கோலகமாக இலங்கை நேரப்படி இரவு 11 மணிக்கு இன்று ஆரம்பமாகின்றன.
இன்று ஆரம்பமாகும் போட்டிகள் அடுத்த மாதம் 11 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இம்முறை ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகள் இரண்டுமே பாரிஸில் இடம்பெறுகின்றமை இதன் விசேட அம்சமாகும். இதில் சுமார் 15,000 போட்டியாளர்கள் பங்கேற்பதுடன், 206 நாடுகள் ஒலிம்பிக் போட்டியிலும் 184 நாடுகள் பாரா ஒலிம்பிக் போட்டிகளிலும் பங்கேற்கின்றன. அதன்படி ஒலிம்பிக் போட்டியில், 206 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 32 விளையாட்டு நிகழ்வுகளுக்கான போட்டியில் 10,714 விளையாட்டு வீரர்கள் இணைந்துள்ளனர்.
இப்போட்டிகளை கண்டு கழிப்பதங்கான டிக்கெட்டுக்கள் ஒன்லைனில் விற்கப்படுவதோடு தற்போது வரை 1.3 கோடி டிக்கெட்டுக்கள் ரசிகர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், 300 கோடி மக்களுக்கும் அதிகமானோர் இந்த போட்டியை தொலைக்காட்சி, சமூகவலைத்தளம் மற்றும் இணையத்தளத்திலும் பார்த்து மகிழ்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக ஒலிம்பிக் ஒருங்கிணைப்பு குழு செய்தி வெளியிட்டுள்ளது.
இன்று நடைபெறும் ஒலிம்பிக் போட்டியின் ஆரம்ப விழாவில் இலங்கை கொடியை ஏந்திச் செல்லும் பொறுப்பு பூப்பந்து வீரர் Viren Nettasinghe மற்றும் ஈட்டி எறிதல் வீராங்கனை Dilhani Lekamge ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதற்காக தருஷி கருணாரத்ன, அருண தர்ஷன மற்றும் நதீஸா தில்ஷானி லேக்கம்கே ஆகிய மூவரும் கடந்த 24 ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்பட்டு சென்றனர்.
இம்முறை ஒலிம்பிக் போட்டிகளுக்கு இலங்கையின் 6 வீர, வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளதுடன் பதங்களை இவர்கள் சுவீகரிப்பார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இம்முறை இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகள் வழமைக்கு மாறாக மைதானத்தில் ஆரம்பமாகாமல் பாரிஸ் ஈபிள் டவருக்கு அருகாமையிலிருந்து கோலாகலமாக ஆரம்பமாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.