அரச நிதி முகாமைத்துவம் மற்றும் பொருளாதார நிலை மாற்றம் தொடர்பான சட்டமூலங்கள் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்றிருந்ததுடன் திருத்தங்களுடன் வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.
அரச நிதி முகாமைத்துவம் சட்ட மூலத்துக்கு எதிர்க்கட்சி ஆதரவளித்திருந்தது.
எனினும் பொருளாதார நிலை மாற்றம் சட்டமூலத்துக்கு ஆதரவளித்தாலும் அதன் சில சரத்துக்களுக்கு எதிர்கட்சியினர் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.
அத்துடன் நேற்றுமாலை 5,30 மணி வரை விவாதம் இடம்பெற்று இறுதியில் சட்டமூலத்துக்கு சபையின் அனுமதியை சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச கோரியிருந்தார்.
இதன்போது எதிர்க்கட்சி பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல, அரச நிதி முகாமைத்துவம் சட்டமூலத்தை ஆதரிப்பதாக சபையில் அறிவித்தார்.
ஆனால் பொருளாதார நிலை மாற்ற சட்டமூலத்துக்கு எதிர்ப்பினை பதிவிடுவதாக லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து குறித்த இரண்டு சட்டமூலங்களும் திருத்தங்களுடன் சபையில் வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டதாக பிரதி சபாநாயகர் சபைக்கு அறிவித்தார்.