அரசமைப்பை மீறியமைக்காக எதிர்காலத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்படலாம் என நாடாளுமன்ற உறுப்பினா் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளாா்.
இவ்விடயம் தொடா்பாக நாடாளுமன்றில் உரையாற்றியபோதே அவா் இதனைக் குறிப்பிட்டாா். தொடா்ந்தும் உரையாற்றிய அவா்,
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை சர்ச்சைக்கு உட்படுத்த வேண்டாம்.
அரசமைப்புக்கு இணங்கவே இந்த இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடைக்கு இணங்க, பதில் பொலிஸ் மா அதிபர் ஒருவரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது.
எனினும், பதில் பொலிஸ் மா அதிபரை அரசமைப்புச் சபையினால் நியமிக்க முடியாது. இந்த அதிகாரத்தைப் பயன்படுத்திதான், பதில் சட்டமா அதிபரைக்கூட ஜனாதிபதி நியமித்தார்.
இதனை மீறினால், ஜனாதிபதி பதவியிலிருந்து சென்றால்கூட, அரசமைப்பை மீறியமைக்காக எதிர்க்காலத்தில் அவருக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்படலாம்” என நாடாளுமன்ற உறுப்பினா் தயாசிறி ஜயசேகர மேலும் தொிவித்தாா்.














