அரசமைப்புச் சபையானது நாடாளுமன்றுக்கு உட்பட்டதா அல்லது நிறைவேற்று அதிகாரத்திற்கு உட்பட்டதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினா் விமல் வீரவன்ச தொிவித்துள்ளாா்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோதே அவா் இதனைக் குறிப்பிட்டாா். இவ்விடயம் தொடா்பாக தொடா்ந்தும் உரையாற்றிய அவா்,
”அரசமைப்புச் சபையானது நாடாளுமன்றுக்கு உரியது என்று பிரதமர் இங்கே கூறினார்.
ஆனால், அரசமைப்புக்கு இணங்க அரசமைப்புச் சபையானது நிறைவேற்று அதிகாரத்திற்கு உட்பட்டது என்றே கூறப்பட்டுள்ளது.
எனவே, அரசமைப்புச் சபையானது நாடாளுமன்றுக்கு உட்பட்டதா அல்லது நிறைவேற்று அதிகாரத்திற்கு உட்பட்டதா என்பதை இங்கே தெளிவுபடுத்த வேண்டும்.
அல்லது இதற்கு முன்னர் வழங்கப்பட்ட வழக்குத் தீர்ப்புக்களில் ஏதேனும், அரசமைப்புச் சபையானது நாடாளுமன்றுக்கு உரியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளதா?
இது தொடர்பான விளக்கமில்லாமல், நாம் விவாதிப்பதில் அர்த்தம் கிடையாது” என நாடாளுமன்ற உறுப்பினா் விமல் வீரவன்ச மேலும் தொிவித்தாா்.