வடமாகாணத்தில் 97% கண்ணிவெடி அகற்றும் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாக வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்லஸ் தெரிவித்துள்ளார்
வடமாகாண அபிவிருத்தி தொடர்பான விசேட செய்தியாளர் மாநாட்டில் இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் உரையாற்றும் போதே வடமாகாண ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் சில பகுதிகளில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் கைவிடப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் அவை மிகவும் வெற்றிகரமாக அகற்றப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.
அத்துடன் குடிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வாக போதியளவு விநியோகத்தை வழங்குவதற்காக அரசாங்கம் 05 குடிநீர் திட்டங்களை ஆரம்பித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
குறிப்பாக யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் இத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், அவற்றில் 02 திட்டங்கள் அடுத்த வருடத்திற்குள் பூர்த்தி செய்யப்பட உள்ளதாகவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.