”ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக” தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ .ஏல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஜனாதிபதி தேர்தல் பணிகளை முன்னெடுப்பதற்காக புதிய பொலிஸ் மா அதிபர் அல்லது பதில் பொலிஸ் மா அதிபரை நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” தேர்தலுக்கான பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக தற்போது தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எதிர்வரும் 14 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிவரை ஆம் திகதி வரை கட்டுப்பணம் செலுத்துவதற்கு சந்தர்ப்பம் காணப்படுகின்றது. தபால் மூல வாக்களிப்புக்கான பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மேலும் எதிர்வரும் 3 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தெரிவத்தாட்சி அதிகாரிகளும் உதவி தேர்தல்கள் ஆணையாளர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவுறுத்தல்களை வழங்கும் பொருட்டு ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்”இவ்வாறு ஆர். எம். ஏ .ஏல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.