ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தல் நடவடிக்கைகளுக்காக அரச நிதியை முறைகேடாக பயன்படுத்துவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ள சிவில் சமூக செயற்பாட்டாளர் ஓஷல ஹேரர் இந்த முறைப்பாட்டை முன்வைத்துள்ளார்.
ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க எதிர்வரும் தேர்தலில் சுயாதீனவேட்பாளராக முன்னிலையாகியுள்ள நிலையில் அரச நிதியை முறைகேடாக பயன்படுத்துவதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகம் மற்றும் அரச சொத்துக்கள் முறை கேடாக பயன்படுத்தப் படுவதாகவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை பொதுமக்களின் வரிபணத்தைத் தேர்தல் பிரசார பணிகளுக்கு பயன்படுத்துவதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.