கேரளா, வயநாட்டின் நிலச்சரிவு நிவாரண பணிகளுக்காக கேரள அரசுக்கு தமிழக அரசினால் 5 கோடி ரூபா வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
வயநாடு நிலச்சரிவு நிவாரண பணிகளுக்கு கேரள அரசுக்கு, தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து 5 கோடி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, ரூபா 5 கோடிக்கான காசோலையை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் வேலு, கேரள மாநில முதலமைச்சா் பினராயி விஜயனிடம் நேரில் வழங்கியுள்ளாா்.
இந்நிலையில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டின் நிவாரணப் பணிகளுக்கான நிதியை வழங்கிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தனது நன்றிகளைத் தொிவித்த கேரள மாநில முதலமைச்சா் பினராயி விஜயன்,
தமிழகத்தின் ஆதரவும் ஒற்றுமையும் மிகவும் பாராட்டப்பட வேண்டியதுடன், மறுவாழ்வு மற்றும் மீள்கட்டமைப்பு முயற்சிகளுக்கு குறித்த நிதி பெரிதும் உதவும் என்றும் குறிப்பிட்டுள்ளாா்.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த மாதம் 30-ந் திகதி பாாிய நிலச்சரிவு ஏற்பட்டதில் 357 பேருக்கு மேற்பட்டோா் உயிாிழந்துள்ளதுடன், மீட்புப் பணிகள் தொடர்ந்தும் 6-வது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.