உறுமய காணி உறுதிப்பத்திர விநியோகம் உள்ளிட்ட பல வேலைத்திட்டங்களைத் தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம். ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் குறித்த வேலைத்திட்டங்களை மீள நடைமுறைப்படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடுவதனால் உறுமய காணி உறுதிப்பத்திரம் வழங்கும் வேலைத்திட்டத்தினை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவா் மேலும் குறிப்பிட்டாா்.