மௌபிம ஜனதா கட்சியின் தலைவரும் தொழிலதிபருமான திலித் ஜயவீர சர்வஜன பலய கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
சர்வஜன பலய கூட்டணியின் மாநாடு சுகததாச உள்ளக அரங்கில் இன்று இடம்பெற்றது.
இன்றைய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தொழிலதிபர் திலித் ஜயவீர, ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதாக இதன்போது அறிவித்தார். இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய திலித் ஜயவீர,
”நாட்டு மக்களின் நம்பிக்கையை நாம் எப்போதும் காப்பாற்றுவோம். மக்களின் அபிலாஷைகளை நாம் பூர்த்தி செய்வோம்.
இனமத வேறுபாடின்றி நாம் நாட்டு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வோம். இன்று இந்த நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்து வங்குரோத்து நிலையில் உள்ளது.
நான் ஒரு தொழிலதிபராக இருந்த போதிலும் நான் மக்கள் தொடர்பாகவும் சிந்தித்தேன்.கோட்டாபய ராathavaஜபக்ஷவை ஜனாதிபதியாக்குவதற்கும் நாம் ஒத்துழைப்பு வழங்கினோம்.
ஆனால் அவர் சதித்திட்டத்தால் ஆட்சிக்கவிழ்ப்புக்கு உள்ளாக்கப்பட்டார். இன்று இந்த நாட்டில் ஊழல் ஆட்சி இடம்பெறுகின்றது.
ஊழல் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டை வீழ்ச்சிப்பாதையில் இருந்து கட்டியெழுப்பி நாட்டை அபிவிருத்தி பாதைக்கு இட்டுச்செல்வதே எமது நோக்கமாகும்” என மௌபிம ஜனதா கட்சியின் தலைவரும் தொழிலதிபருமான திலித் ஜயவீர மேலும் தொிவித்தாா்.