தேர்தல் தோல்விக்கு அஞ்சுபவர்களே இன்று கட்சித்தாவலில் ஈடுபட்டு வருவதாக பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்ட அமைப்பாளர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தொிவித்தபோதே அவா் இதனைக் குறிப்பிட்டாா். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,
அரசியல் லாபம் கருதி பொதுஜன பெரமுனவில் இருந்து பலர் கட்சித்தாவல்களில் ஈடுபட்டுள்ள போதிலும் கட்சியின் ஆதரவாளர்கள் ஒரு போதும் விலகிச் செல்லமாட்டார்கள்.
ஒரு சிலரின் செயற்பாடுகளினாலேயே பொதுஜன பெரமுன இன்று இவ்வாறான ஒரு நிலையை எதிர்கொண்டுள்ளது. பொதுஜன பெரமுனகட்சியை பிரதிநிதித்துவப்படுத்துவோர் அரசியல் லாபம் கருதி விலகிச் சென்றாலும் கட்சியின் ஆதரவாளர்கள் ஒரு போதும் விலகிச் செல்லமாட்டார்கள்.
தேர்தல் வெற்றி தொடர்பில் பலர் இன்று விமர்சிக்கின்றனர். எத்தகைய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் மக்கள் ஆதரவு பொதுஜன பெரமுனவுக்கே உள்ளது.
பொதுஜன பெரமுன வீழ்ச்சியடைந்துள்ளதாக இன்று பலர் விமர்சிக்கின்றனர். நாம் ஒரு போதும் கட்சியின் கொள்கைகளுக்கு முரணாகச் செயற்பட மாட்டோம்.
பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்தால் ரணில் விக்ரமசிங்கவின் கொள்கைகளுக்கு அமையவே செயற்பட வேண்டும்.
அதேபோல் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்தால் சஜித் பிரேமதாசவின் கொள்கைகளுக்கு அமையவே செயற்பட வேண்டும்.
தேர்தல் தோல்விக்கு அஞ்சுபவர்களே இன்று கட்சித்தாவலில் ஈடுபட்டு வருகின்றனர் என இந்திக்க அனுருத்த மேலும் தொிவித்தாா்.