இந்தியா கேரளா வயநாடு மண்சரிவில் சிக்கி உயிரிழந்த அடையாளம் தெரியாத 29 உடல்களுக்கு ஒரே இடத்தில் இறுதிச் சடங்கு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட மண்சரிவு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதுடன், கடந்த ஆறு நாட்களாக நடந்த மீட்புப் பணிகளில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர்.
இதனிடையேஇ 206 பேர் காணாமல் போயுள்ளதுடன், அவர்களை தேடும் பணி முன்னெடுக்கப்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன் 219 உடல்களும், 143 உடல் பாகங்களும் மீட்கப்பட்டுள்ளதாகவும், 80 இக்கும் மேற்பட்ட உடல்கள் அடையாளம் காணப்படவில்லை எனவும், அடையாளம் காண முடியாத உடல்களுக்கு அரசு சார்பில் இறுதிச் சடங்கு செய்யப்பட்டு, அடக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த உடல்களை வயநாட்டின் புதுமலை பகுதியில் அடக்கம் செய்வதற்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், அங்கு கடந்த இரண்டு நாட்களில், அடையாளம் தெரியாத ஆறு உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.