இந்தியா கேரள மாநிலம், வயநாட்டில் மண்சரிவுகளினால் ஏற்பட்ட பாதிப்பை நேரில் பார்வையிட பிரதமர் மோடி அங்கு செல்லவுள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
மாநில அரசின் கோரிக்கையை ஏற்று, வயநாடு பேரழிவின் தீவிரம் குறித்து ஆய்வு செய்ய 9 உறுப்பினர்கள் கொண்ட குழுவை மத்திய உள்துறை அமைச்சு நியமித்துள்ளதுடன், பேரழிவின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, விரிவான மறுவாழ்வு நிதி தொகுப்பை மத்திய அரசு அறிவிக்கும் என நம்புவதாக அவர் தெரிவித்தார்
அத்துடன், மாநில அரசுக்கு மத்திய அரசு மிகவும் ஒத்துழைப்புடனும், உதவிகரமாகவும் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் மண்சரிவில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கான உதவி மற்றும் பாதிக்கப்பட்டோரின் மறுவாழ்வு திட்டங்களுக்கு மத்திய அரசிடமிருந்து போதிய நிதி கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.