இயந்திர கோளாறு காரணமாக இந்தியாவில் கரையொதுங்கிய இலங்கை மீனவர்கள் இருவரை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடக்குமாகாண மீனவஅமைப்புக்களின் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணம் அனலைதீவு பகுதியில் இருந்து கடந்த ஜூன் மாதம் 10 ஆம் திகதி கடலுக்கு சென்ற இரண்டு மீனவர்கள், கடல் சீற்றம் காரணமாக இயந்திரம் பழுதடைந்த நிலையில் கடலில் காணாமல் போயிருந்தனர்.
காணாமல் போன மீனவர்கள் ஜூ மாதம் 12 ஆம் திகதி இந்தியாவின் நாகப்பட்டினம் – ஆற்காட்டுதுறை மீனவர்களினால் பாதுகாப்பான முறையில் மீட்கப்பட்டனர்
மேலும் இதன்போது குறித்த மீனவர்கள் விசாரணை நிமித்தம் இந்திய கரையோர காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.
எவ்வாறாயினும் குறித்த மீனவர்கள் இரண்டு மாதங்கள் கடந்துள்ள போதிலும் இதுவரை விடுவிக்கப்படவில்லை என வடக்கு மாகாண மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
எனவே குறித்த மீனவர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த இரண்டு மீனவர்களும் நல்லெண்ண அடிப்படையில் நாட்டிற்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் , மத்திய அரசு, வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரிடம் வடக்கு கிழக்கு மீனவர்கள் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.