உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையில் இன்று கூடவுள்ள அமைச்சரவை கூட்டத்திலேயே உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாகக் கூறப்படுகின்றது.
உலக முதலீட்டாளர் மாநாட்டின் தொடர்ச்சியாக தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 27ஆம் திகதி அமெரிக்கா செல்லவுள்ளார். மேலும் அங்கு கூகுள் நிறுவன அதிகாரி உட்பட பல்வேறு தொழில் அதிபர்களை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் முதலமைச்சர் மு க ஸ்டாலினின் அமெரிக்கா செல்லும் நிலையில் அதற்கு முன்னதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறு இருப்பினும் இது குறித்த உத்தியோக பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
சமீபத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசும்போது, வரும் 19ஆம் திகதிக்கு மேல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராகலாம் என்ற கருத்தை வெளிப்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.