எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரை கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை கட்டுப்பணம் செலுத்துவதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் நாளை நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது.
இதன்படி நேற்றைய தினம் 5 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கட்டுப்பணம் செலுத்துவதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் நாளை நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது.
அத்துடன் வேட்பு மனுக் கோரல் எதிர்வரும் 15 ஆம் திகதி முற்பகல் 9 மணி முதல் 11 மணிவரை இடம்பெறவுள்ளது. அன்றைய தினம் இராஜகிரிய பகுதியிலுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதனை அண்மித்த பகுதியில் விசேட பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்னாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். காவல்துறை மற்றும் காவல்துறை விசேட அதிரடிப்படையினர் அடங்கலாக 1,500 பேர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.