இத்தாலியின் சிசிலியில் கடலில் மூழ்கிய படகின் சிதைவுகளில் இருந்து ஐந்து உடல்களை சுழியோடிகள் மீட்டுள்ளனர்.
படகின் சிதைவுகளை தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட சுழியோடிகள் காணாமல்போன ஆறுபேரில் ஐவரின் உடல்களை மீட்டு கரைக்கு கொண்டுவந்துள்ளனர்.
மீட்கப்பட்ட உடல்களை இத்தாலிய கடற்படையினர் இன்னமும் அடையாளம் காணவில்லை என்பதோடு பிரிட்டனை சேர்ந்த நால்வரையும் அமெரிக்காவை சேர்ந்த இருவரையும் சுழியோடிகள் தேடிவருகின்ற சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.