விமான நிலையத்தினூடாக நாட்டிற்குள் பிரவேசிக்கக் கூடிய எம்பொக்ஸ் அல்லது குரங்கு அம்மை நோயாளர்களை இனங்காண்பதற்காக நாடளாவிய ரீதியில் தடுப்பூசி போடும் முறமை ஏற்படுத்தப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் நோயாளர்கள் பதிவாகினால், அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சையளிப்பதற்கான வசதிகள் கொழும்பு தொற்று நோய் நிறுவகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியவர் பாலித மஹிபால அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார்.
இந்த நோய்க்கு சிறந்த தயாரிப்பு மற்றும் பதிலளிப்பதற்கு தேவையான வழிகாட்டுதல்கள் சுகாதார நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான அறிவுறுத்தல்கள் அடங்கிய சுற்றறிக்கை அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.