முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்கள் எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் ஊசி மருந்துகளை கொள்வனவு செய்தமை தொடர்பான வழக்கு இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நேற்று கெஹலிய ரம்புக்வெல்லவை விளக்கமறியலில் வைக்குமாறு கோரி மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவிற்கு ஆட்சேபனைகளை எதிர்வரும் செப்டெம்பர் 12ஆம் திகதி தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது