ரஷ்யாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீனப் பிரதமர் லீ கியாங் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்தித்துள்ளார்.
இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் யுத்தம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் ரஷ்ய – உக்ரைன் போரில் சீனா மௌனக் கொள்கையை கடைபிடித்து வரும் நிலையில், ஆயுதம் ஏந்திய போரை தனது நாடு ஒருபோதும் ஆதரிக்காது என சீன பிரதமர் தெரிவித்துள்ளார்.