நாட்டில் விவசாயத்துறையை ஊக்குவிப்பதன் மூலமே பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கடுகன்னாவ பகுதியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,
நாடளாவிய ரீதியாகவுள்ள மக்களை அழைத்து ரணில் விக்ரமசிங்க அநுராதபுரத்தில் கூட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர்.
அன்றைய தினத்திலிருந்து இதுவரையில் எந்த கூட்டங்களும் நடத்தப்படுவதில்லை.
பொதுமக்களின் நிதியைக் கொண்டு முழு அளவிலான தேர்தல் பிரசார பணிகளை ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்துள்ளார்.
வாகனம், எரிபொருள், வீடு, மின்கட்டணம், நீர்க் கட்டணம் என்பனவற்றுக்கு அரசாங்கத்தின் நிதியே பயன்படுத்தப்படுகிறது.
மனுச நாணயக்கார மற்றும் ஹரீன் பெர்னாண்டோ ஆகியோர் அண்மையில் அமைச்சுப் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டனர்.
பதவி நீக்கப்பட்ட இரண்டு நாட்களில் ஜனாதிபதியினால் குறித்த இருவருக்கும் ஆலோசகர் பதவிகள் வழங்கப்பட்டன.
நாடு முன்னோக்கிச் செல்ல வேண்டுமானால் விவசாயத்துறை மேம்பட வேண்டும்.
கட்டங்கட்டமாக நாட்டின் விவசாயத்துறையை முன்னேற்றமடையச் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்” என அநுர குமார திஸாநாயக்க மேலும் தொிவித்தாா்.