வடகிழக்கு சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள ஹுலுடாங் நகரில் ஒரு வாரமாக பெய்து வரும் கனமழையால் 11 பேர் உயிரிழந்துள்ளதோடு மேலும் 14 பேர் காணாமல் போயுள்ளதாக சீன செய்திகள் தெரிவிக்கின்றன.
காணாமல் போனவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரத்தில் கனமழையால் 100 கோடிக்கும் அதிகமான சேதம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நகரின் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிகபட்சமாக தினசரி மழைப்பொழிவு 52.8 செ.மீ. பதிவானதாகவும், அரை நாளில் ஒரு வருட மதிப்புள்ள மழை பெய்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் இது 1951ல் வானிலை பதிவுகள் தொடங்கியதிலிருந்து ஹுலுடாவ் நகரில் பெய்த வலுவான மழையாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் சீனாவில் நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.