இலங்கையில் தற்போது 30,000 விபச்சாரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
மேற்கொண்ட ஆய்வின் படி , கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாட்டில் சுமார் 80,000 ஓரினச்சேர்க்கையாளர்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய பாலியல் நோய் கட்டுப்பாட்டுப் பிரிவு தனது சமீபத்திய தரவுகளில் இதனைத் தெரிவித்துள்ளது.