2024 ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அரச மற்றும் அரச அங்கீகாரம்பெற்ற தனியார் பாடசாலைகளில் 2024 ஆம் ஆண்டிற்க்கான இரண்டாம் தவணை கடந்த ஓகஸ்ட் மாதம் 16ஆம் திகதி நிறைவடைந்திருந்தது.
இந்த நிலையிலேயே மூன்றாம் தவணையின் முதற்கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது. மூன்றாம் தவணையின் முதல் கட்டம் ஓகஸ்ட் 26 ஆம் திகதி முதல் நவம்பர் 22 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன், மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் கல்விப்பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்குப் பின்னர் 2025 ஜனவரி 2 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 2024 ஆம் ஆண்டின் பாடசாலைகளின் மூன்றாம் தவணை 2025 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் திகதி நிறைவடையும் என கல்வி அமைச்சு ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது