கட்சி முடிவெடுத்தால் ஜனாதிபதியை ஆதரிப்பேன், கட்சியின் தீர்மானமே இறுதித்தீர்மானமாக அமையுமென , கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப்பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்துக்கு முஸ்லிம் ஆளுநர் வேண்டும் என்று எந்த ஒரு உடன்படிக்கையும் சஜித் பிரேமதாசவுடன் செய்யப்படவில்லை.
தமிழ் முஸ்லிம் உறவுகளை சீரழிப்பதற்காகச்செய்யப்படும் பிரச்சாரம் இது. எனது பல்கலைக்கழகத்தை மீட்டுத் தந்ததுடன்,அதைத் திறந்து வைக்கவும் ஜனாதிபதி முன்வந்தார் என்றும் இதற்கும் அரசியலுக்கும் எதுவித சம்பந்தமும் இல்லை.
எனது மகனின் திருமண வைபவத்தின்போது ஜனாதிபதியும், சஜித்தும் வந்திருந்தனர்.
தனிப்பட்ட வாழ்க்கையில் இவ்வாறான அரசியல் உறவுகளை தவிர்க்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் எனது கட்சி முடிவெடுத்தால் நான் உங்களை ஆதரிப்பேன் என்று ஜனாதிபதியிடம் சொன்னேன்.
எனக்கும் அவருக்கும் எதுவித பிரச்சினையும் இல்லை ‘என கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா குறிப்பிட்டுள்ளார்.