எரிபொருட்களின் விலையில் இன்று (31) நள்ளிரவு முதல் மாற்றம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைய இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதேவேளை , ஜூலை மாதத்திற்கான திருத்தப்பட்ட எரிபொருள் விலையே ஓகஸ்ட் மாதம் முழுவதும் நடைமுறையில் இருந்தது. ஒகஸ்ட் மாதத்திற்கான எரிபொருள் விலையில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்படி, 92 ஒக்டேன் பெட்ரோல் ஒரு லீற்றரின் விலை 344 ரூபாவாகவும், 95 ஒக்டேன் பெட்ரோல் ஒரு லீற்றர் 379ரூபாவாகவும், சூப்பர் டீசல் 355 ரூபாவாகவும், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 202 ரூபா என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்பட்டால் போக்குவரத்து கட்டணம் உட்பட பல்வேறு விலைகளில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.