ரஷ்ய எல்லைக்கு அருகில் உள்ள நகரத்தில் உள்ள 12 அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு 59 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், உக்ரைனின் வடகிழக்கு பகுதியில் உள்ள கார்கிவ் நகரில் உள்ள விளையாட்டு மைதானத்தில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 14 வயது சிறுமி உயிரிழந்துள்ளதுடன் மேலும் 9 குழந்தைகள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரத்தில் 400க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் தங்கள் நாட்டை நோக்கி ஏவப்பட்டதாக உக்ரைன் அறிவித்துள்ளது.