பிரான்ஸின் புதிய பிரதமராக ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னாள் பிரெக்ஸிட் பேச்சுவார்த்தைக் குழு தலைவர் மிஷெல் பார்னியரை (Michel Barnier) அந்நாட்டு ஜனாதிபதி இமானுவல் மேக்ரோன் நேற்று நியமித்தார்.
பிரக்ஸிட் பேச்சுவார்த்தையாளரான மைக்கேல் பார்னியரை பிரான்ஸ் புதிய பிரதமராக அந்நாட்டு ஜனாதிபதி இமானுவேல் மேக்ரோன் நியமித்துள்ளதாக எலிஸி அரண்மனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மைக்கேல் பார்னியர், 2016 – 2021 ஆம் ஆண்டுவரை ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பிலான பேச்சுவார்த்தைகளுக்கு தலைமை தாங்கியவர் என்பது விசேட அம்சமாகும்.
மேலும், இவர் லெஸ் குடியரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்தலில் இடதுசாரி மக்கள் முன்னணி அதிக இடங்களை வென்றபோதும் முழுமையான பெரும்பான்மை யாருக்கும் கிடைக்காதமையினால் பிரான்சில் தொங்கு நாடாளுமன்றம் ஏற்பட்டது.
இந்த நிலையிலேயே பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரோனால், பிரான்ஸ் புதிய பிரதமராக மைக்கேல் பார்னியர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் மூலம் பிரான்ஸ் வரலாற்றில் 5 ஆவது குடியரசின் மிகவும் வயதான பிரதமர் எனும் பெயரை மைக்கேல் பார்னியர் பெறுவார்.
பொதுத் தேர்தலில் 47 இடங்களுடன் 4 ஆவது இடத்தில் உள்ள வலதுசாரி கட்சித் தலைவரான பார்னியர் தற்போது பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளமையால், ஏனையக் கட்சிகளின் ஆதரவுடன் புதிய அரசாங்கத்தை அமைக்கும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.















