நியூசிலாந்து அணியின் சுழல் பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கட் பேரவை தெரிவித்துள்ளது.
நியூசிலாந்தின் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் டெஸ்ட் மற்றும் இலங்கைக்கு எதிரான ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும், நியூசிலாந்து அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் துடுப்பாட்ட பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளார்.