இவ்வாண்டின் முதல் எட்டு மாதங்களில் வரி வருமானம் கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 28.5% அதிகரித்துள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இந்த ஆண்டு ஜனவரி முதல் ஓகஸ்ட் இறுதி வரை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் 12,29,245 மில்லியன் ரூபா வரி வருமானத்தை ஈட்டியுள்ளது.
கடந்த வருடம் இந்த காலப்பகுதியில் 9,56,418 மில்லியன் ரூபாவை மாத்திரம் ஈரக்க முடிந்தது.
கூட்டு நிறுவனம் மற்றும் கூட்டு நிறுவனம் அல்லாதவற்றின் வருமான வரி, பெறுமதி சேர் வரி, சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி, பந்தயம் மற்றும் சூதாட்ட வரி, பங்கு பரிவர்த்தனை வரி மற்றும் பிற வகை வரிகள் போன்றன இந்த வருமான அதிகரிப்புக்கு காரணிகளாக அமைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.