இலங்கையர் ஒருவர் போலி கடவுச் சீட்டினை வைத்திருந்த குற்றச்சாட்டில் மலேசியாவின் புக்கிட் காயூ ஈத்தாமில்( Bukit Kayu Hitam )பகுதியில் உள்ள மலேசியா-தாய்லாந்து எல்லைச் சோதனைச் சாவடியில் வைத்து குடிவரவுத் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
21 வயதான அவர், ‘ராஜா டேனி டெனிஸ்’ என்ற பெயர் கொண்ட கடவுச்சீட்டைப் பயன்படுத்தி தாய்லாந்திற்கு செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
செல்லுபடியாகும் பயண ஆவணம் இன்றி நாட்டிற்குள் நுழைந்து தங்கியிருந்தமைக்காக சந்தேகநபர் குடிவரவு சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இதேவேளை இந்த போலி கடவுச்சீட்டு பின்னணியில் உள்ள மாபியா குறித்து முழு விசாரணைகள் தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.