சஜித்துடன் கடந்த மாதம் ஏற்படுத்திக்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மலையக சாசனம் என்ற பிரகடனத்தின் விளக்கம், மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் எதிர்கால திட்டங்களை விளக்கும் நிகழ்வொன்று நேற்று நுவரெலியாவில் இடம்பெற்றது.
இந்திய வம்சாவளி மலையக தமிழர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் முகமாக சஜித் பிரேமதாசவுக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையின் மலையக சாசன பிரகடனம் நேற்று நுவரேலியாவிலுள்ள தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்றிருந்தது.
நிகழ்வானது, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம், மற்றும் மலையக மக்கள் முன்னணியின் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி ராதாகிருஷ்ணன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
மலையக சாசனம் என்ற பிரகடனத்தின் விளக்கம், மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் எதிர்கால திட்டம் என்ன