மத்திய காஸா பகுதியில் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நடத்திவரும் முகாமில் இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதலில், ஐ.நா. அமைப்பைச் சேர்ந்த 6 ஊழியர்கள் உள்ளிட்ட 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
மத்திய காஸா பகுதியில் அமைந்துள்ள நுசீரத் எனும் பிரதேசத்தில் அமைந்துள்ள அகதிகள் முகாமிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த முகாமில் அமைந்துள்ள அல்-ஜௌனி பாடசாலையை குறிவைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஐ.நா. நடத்திவரும் குறித்த பாடசாலை மீது, துல்லியமாகத் தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட ஆயுதங்கள் கொண்டே இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலில் ஐ.நா. அமைப்பைச் சேர்ந்த 6 ஊழியர்கள் உள்ளிட்ட 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
எனினும், இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள இஸ்ரேல் இராணுவம், பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இந்த நடவடிக்கையின்போது பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளது.
இந்தத் தாக்குதல் தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணி நிறுவனம், கடந்த ஒக்டோபரில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ{க்கும் இடையே போர் தொடங்கியதில் இருந்து, ஒரே தாக்குதலில் அதிக எண்ணிக்கையிலான தங்கள் பணியாளர்கள் உயிரிழந்தது இதுவே முதல்முறை என்று தெரிவித்துள்ளது.
அத்தோடு, கடந்;த 11 மாதங்களில் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பாடசாலை கட்டடங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவது இது ஐந்தாவது முறை என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.