நாட்டை மீட்டு மக்களை பாதுகாத்தவரிடம் இந்த நாட்டை ஒப்படைக்க வேண்டியது எமது கடமையாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தொிவித்தாா்.
களுத்துறையில் இடம்பெற்ற அரசியல் கூட்டமொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தொிவித்தபோதே அவா் இதனைக் குறிப்பிட்டாா். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,
”தேர்தலில் பொதுமக்கள் சிலிண்டர் சின்னத்திற்கு வாக்களித்து ரணில் விக்ரமசிங்கவை வெற்றியடையச் செய்வார்கள்.
தேர்தல் மேடைகளில் நாம் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து செயற்பட்டவர்கள் அல்ல. நாம் மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர்.
ஆனாலும் நாம் தற்போது ரணில் விக்ரமசிங்கவிடம் இந்த நாட்டை மீண்டும் ஒப்படைக்க தீர்மானித்துள்ளோம்.நாடு நெருக்கடியை எதிர்கொண்ட சந்தரப்பத்தில் நாட்டை பொறுப்பேற்குமாறு எதிர்க்கட்சி தலைவரிடம் கூறினோம்.
அவர் அதற்கு பின்வாங்கினார். நாட்டை பொறுப்பேற்கவில்லை. அதேபோல் அநுரகுமாரவுக்கு அழைப்பு விடுத்தோம் அவரும் நாட்டை பொறுப்பேற்க தயங்கினார்.
அன்று நாட்டை பொறுப்பேற்க ரணில் விக்ரமசிங்க மாத்திரமே நாட்டை பொறுப்பேற்க முன்வந்தார். இன்று கட்டம் கட்டமாக நாட்டின் இயல்பு நிலையை வழமைக்கு கொண்டு வந்துள்ளார்.
எனவே நாட்டை மீட்டு மக்களை பாதுகாத்தவரிடம் இந்த நாட்டை ஒப்படைக்க வேண்டியது எமது கடமையாகும்” என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன மேலும் தொிவித்தாா்.