நடத்தை விதிகளை மீறிய காரணத்திற்காக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் துலிப் சமரவீரவுக்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் 20 ஆண்டுகள் தடை விதித்துள்ளது.
52 வயதான சமரவீர, கிரிக்கெட் விக்டோரியா ஊழியராக இருந்த காலத்தில் அவுஸ்திரேலிய கிரிக்கெட்டின் நடத்தை விதிகளை கடுமையாக மீறியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்த விசாரணைகளை முன்னெடுத்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் அவருக்கு 20 ஆண்டுகள் தடை உத்தரவை வழங்கியது.
1993 மற்றும் 1995 க்கு இடையில் இலங்கைக்காக ஏழு டெஸ்ட் மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் விக்டோரியா பெண்கள் மூத்த பயிற்சியாளர் பதவிக்கு தரம் உயர்த்தப்படுவதற்கு முன்பு, நீண்ட காலமாக விக்டோரியா பெண்கள் மற்றும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் WBBL உதவி பயிற்சியாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.