இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து சேவைகள், மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இடம்பெறும் என இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.
தேர்தல் கடமைகளுக்காக அரச பேருந்துகள் ஈடுபடுத்தப்படுகின்றமையே இதற்கான காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், தேர்தல் கடமைகளுக்காக 1,600க்கும் மேற்பட்ட பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், சொந்த கிராமங்களை நோக்கிச் செல்பவர்களுக்கான பேருந்து சேவைகள் உரிய வகையில் இடம்பெறவில்லை எனப் பயணிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
தங்களது பயணத்திற்காகப் பல மணி நேரங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.