தெஹிவளை பகுதியில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடத்தை வீதி, களுபோவில பிரதேசத்திலேயே இன்று காலை சுமார் 6.40 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
தாக்குதலில் வலது தோள்பட்டைக்கு அருகில் 02 துப்பாக்கிச் சூட்டுக்களுடன் படுகாயமடைந்த 45 வயதுடைய நகரசபை ஊழியர் உடனடியாக மீட்கப்பட்டு களுபோவில வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
எனினும், அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் வியாபாரிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலின் பிரதிபலனாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார், இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.