அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான நேற்றைய மூன்றாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி டக்வத் லூயிஸ் முறைப்படி 46 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 304 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
தொடர்ந்து இங்கிலாந்து அணி பதிலளித்தாடி வந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் டக்வத் லூயிஸ் முறைப்படி இங்கிலாந்து அணிக்கு 209 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
எனினும் மழை குறுக்கிடுவதற்கு முன்னர் 37.4 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 254 ஓட்டங்களைப் பெற்றிருந்த இங்கிலாந்து அணி 46 ஓட்டங்களால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் 348 நாட்களுக்குப் பின்னர் அவுஸ்திரேலிய அணி ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தனது முதலாவது தோல்வியினை சந்தித்துள்ளது.
அவுஸ்திரேலிய அணி இறுதியாக விளையாடிய 14 போட்டிகளிலும் எதிரணியை வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.