இராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்ட சுமார் 90 பாலஸ்தீனியர்களின் சிதைந்த உடல்கள் நிரப்பப்பட்ட கொள்கலனை இஸ்ரேல் காசாவிற்கு அனுப்பியுள்ளது
எனினும் கொள்கலன்னில் உள்ளவர்களின் அடையாளங்கள் மற்றும் அவர்கள் எங்கே கொல்லப்பட்டார்கள் என்ற விபரங்களை இஸ்ரேல் முறையாக வெளியிடாத காரணத்தினால் அவற்றை பெறுப்பெடுப்பதற்கு ஹமாஸ் நடத்தும் காசா சுகாதார அமைச்சு மறுத்து விட்டது.
இது குறித்து காசா, சுகாதார அமைச்சின் ஊடக அதிகாரியான இயாத் கதீஹ் தெரிவிக்கையில்
அடையாளம் தெரியாத சடலங்களுடன் ட்ரக் வண்டி காசாவுக்குள் வந்தமை இது ஐந்தாவது சந்தர்ப்பமாகும் என்றும் இனிமேல் சுகாதார அதிகாரிகள் எந்த ஒரு உடலையும் அடையாளம் காணாத நிலையில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
இதேவேளை ஒக்டோபர் 7 தாக்குதலுக்குப் பின்னர், இஸ்ரேலியப் படைகள் நூற்றுக்கணக்கான உடல்களை அசுத்தமான நிலையில் காசாவிற்கு திருப்பி அனுப்பியுள்ளதுடன், அவற்றில் பல சிதைந்த மற்றும் அடையாளம் காண முடியாத சடலங்களும் அடங்கும் என்றும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது