இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் நாட்டின் சீர்திருத்த நடவடிக்கைகளின் போக்கை கணிசமான அளவில் மாற்றாது என சர்வதேச முதலீடு மற்றும் கடன் தர நிர்ணய சேவையான மூடிஸ் தெரிவித்துள்ளது.
இலங்கையில் உருவாகியுள்ள புதிய சூழல் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு மூடிஸ் இதனை குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும், சில கொள்கை முன்னுரிமைகளை மீட்டமைக்கும் போது நிதி ஸ்திரத்தன்மையை பராமரிப்பது சவாலானதாக இருக்கலாம் என்று நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.