ஜப்பான் முதன்முறையாக தாய்வான் நீரிணை வழியாக கடல்சார் தற்காப்புப் படைக் கப்பலை அனுப்பியுள்ளது என்று ஜப்பான் ஊடகங்கள் வியாழனன்று (26) செய்தி வெளியிட்டன.
இது தாய்வான் – சீனா இடையே காணப்படும் போர் பதற்றத்தை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
JS Sazanami என்ற கடற்படை கப்பலானது அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தின் கப்பல்களுடன் புதன்கிழமை (25) வடக்கிலிருந்து தெற்கு நோக்கி குறித்த நீரிணை வழியாகச் சென்றது.
முன்னோடியில்லாத இந்த நடவடிக்கை மூலமாக பிரிட்டன், கனடா, பிரான்ஸ், அவுஸ்திரேலியா, நெதர்லாந்து, ஜிலாந்து மற்றும் ஜெர்மனிக்கு அடுத்தபடியாக குறுகிய ஆனால் மூலோபாய நீரிணை வழியாக போர்க்கப்பல்களை அனுப்பும் அண்மைய அமெரிக்க நட்பு நாடாக ஜப்பான் மாறியுள்ளது.
அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் குறித்த நீரிணைப் பகுதியை “சர்வதேச நீர் பகுதி” என்று அழைக்கின்றன, ஆனால் சுயமாக ஆளப்படும் தாய்வானை அதன் பிரதேசத்தின் ஒரு பகுதியாகக் கருதும் சீனா, நீர்வழிப்பாதையை உரிமை கோருகின்றமை குறிப்பிடத்தக்கது.