விமானத் துறையின் கார்பன் உமிழ்வைக் குறைக்க விஞ்ஞானிகள் ஒரு புதுமையான யோசனையை முன்வைத்துள்ளனர்.
அதன்படி, மெதுவாகப் பறப்பதும், விமான பயண நேரத்தை அதிகரிப்பதும் காபன் உமிழ்வைக் குறைக்கும் என்று ஒரு புதிய ஆய்வு கூறுகிறது.
2050 ஆம் ஆண்டிற்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வை அடைவதற்கான தற்போதைய இலக்கை தொழில்துறை கொண்டிருந்தாலும், அது இப்போது சாத்தியமில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
எனினும், புதிய முறையின் மூலம் அதே ஆண்டுக்குள் எரிபொருள் விரயத்தை 50 சதவீதம் குறைக்க முடியும்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தால் விமானப் பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டது, இது காலநிலை மாற்றத்தில் அதன் தாக்கத்தை குறைக்க முயற்சி செய்யக்கூடிய தொடர்ச்சியான நிலையான இலக்குகளை பட்டியலிடுகிறது.
ஆய்வின்படி, புவி வெப்பமடைதல் விகிதத்தின் அதிகரிப்புக்கு விமானப் போக்குவரத்து தற்போது நான்கு சதவீதம் பங்களிக்கிறது. அதில் 2.5 சதவிகிதம் உலகளாவிய காபன் உமிழ்வுகளிலிருந்து மட்டுமே வருகிறது.
இந்த நிலையில், விமான பயண நேரத்தை நீட்டிப்பதும், மெதுவாகப் பறப்பதும் எரிபொருள் விரயத்தை குறைக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
எரிபொருள் எரிப்பை ஐந்து முதல் ஏழு சதவீதம் வரை குறைக்க விமான வேகத்தை சுமார் 15 சதவீதம் குறைக்க ஆய்வுகள் பரிந்துரைக்கின்றன.