ஹிஸ்புல்லா அமைப்பு ஒழிக்கப்படும் வரை இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தும் என அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
லெபனானின் தலைநகரான பெய்ரூட்டின் புறநகர்ப்பகுதியை குறிவைத்து இஸ்ரேலிய விமானப்படை வான்வழித் தாக்குதல் நடத்தியதில் இருவர் உயிரிழந்ததுடன் 15 பேர் படுகாயமடைந்தனர். இந்நிலையில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க நெதன்யாகு அமெரிக்கா வந்தார்.
இதன்போது, உலகளாவிய போர் நிறுத்த அழைப்புகளை தாங்கள் நிராகரிப்பதாகவும், வான்வழித் தாக்குதல்களை தீவிரப்படுத்த உள்ளதாகவும் தங்கள் கொள்கை தெளிவாக உள்ளதால் முழு பலத்துடன் ஹிஸ்புல்லாவைத் தொடர்ந்து தாக்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஹிஸ்புல்லா அமைப்பினரின் பதுங்கும் இடங்கள் அனைத்தும் ஒழிக்கப்படும் வரை ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தும் எனவும் தாங்கள் நிறுத்த மாட்டார்கள் எனவும், இது தங்கள் கொள்கை யாரும் தவறாக நினைக்க வேண்டாம் எனவும் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.