பொது இடத்தில் குப்பை கொட்டினால் விதிக்கப்படும் அபராதம் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொது இடத்தில் திடக்கழிவை எரித்தால் விதிக்கப்படும் அபராதத்தை 1,000 ரூபாவிலிருந்து 5,000 ரூபாவாக உயர்த்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
சென்னையில் பொது இடத்தில் மரக்கழிவு கொட்டினால் விதிக்கப்படும் அபராதம் 200 ரூபாவிலிருந்து 2,000 ரூபாவாகவும் , வியாபாரிகள் குப்பை தொட்டி வைக்காவிட்டால் விதிக்கப்படும் அபராதம் 100 ரூபாவிலிருந்து 1,000 ரூபாவாகவும், மெரினா, அண்ணாநகரில் பொது இடத்தில் நிகழ்ச்சி நடத்திவிட்டு தூய்மைப்படுத்தாவிட்டால் 5000 ரூபாவாகவும் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, சென்னை மாநகராட்சியின் பொது இடத்தில் குப்பை கொட்டினால் விதிக்கப்படும் அபராதத்தை 1,000 ரூபாவாக உயர்த்த மாமன்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.