இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு விழாவை முன்னிட்டு, 7000 கிலோ மீற்றர், நீள கார் பேரணி நடத்தப்படுவதாக இந்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்திய வான்வெளியைப் பாதுகாப்பதும் இ போர்க்காலங்களில் வான்வழிப் போரை நடத்துவதும் இந்திய விமானப் படையின் முதன்மைப் பணியாகும். இது அதிகாரப்பூர்வமாக, அக்டோபர் 8ம் தேதி 1932ம் ஆண்டு பிரிட்டிஷ் பேரரசின் துணை விமானப்படையாக நிறுவப்பட்டது. தற்போது இதன் 92வது ஆண்டு விழா வரும் அக்டோபர் 8ம் திகதி நடைபெறவுள்ளது.
இதனால் உலகின் மிக உயரமான விமானப்படை நிலையங்களில் ஒன்றான லடாக்கின் தோயிஸ் முதல் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள தவாங் வரை 7000 கிமீ தூரம் கார் பேரணி நடத்தப்படும் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.