பதவியேற்கவுள்ள ஜன்பானின் புதிய பிரதமர் ஷிகெரு இஷிபா, ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி (LDP) தலைமைப் போட்டியில் வெற்றி பெற்ற மூன்று நாட்கள் கழித்து தேர்தலுக்கான திடீர் அழைப்பினை விடுத்துள்ளார்.
அதன்படி, ஒக்டோபர் 27 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.
ஜப்பானின் பிரதமராக ஃபுமியோ கிஷிடாவுக்குப் பதிலாக இஷிபா செவ்வாய்க்கிழமை (30) பதவியேற்க உள்ளார்.
இந்த நிலையில் தேர்தலுக்கான அழைப்பினை விடுத்த அவர், டோக்கியோவில் உள்ள லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைமையகத்தில் செய்தியாளர் கூட்டத்தில் திங்களன்று (30) உரையாற்றுகையில் புதிய நிர்வாகம் கூடிய விரைவில் மக்களால் தீர்மானிக்கப்படுவது அவசியம் என்று கூறினார்.
ஒரு வருடத்திற்கு முன்னதாக ஒக்டோபரில் நடைபெற உள்ள தேர்தல், நாடாளுமன்றத்தின் கீழ்சபையை எந்த கட்சி கட்டுப்படுத்துகிறது என்பதை முடிவு செய்யும் என்பதும் குறிப்பிடத்தக்கது.