ராஜபக்ஷ ஆட்சியின் போது, பொது நிதியை கொள்ளையடித்ததாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை நிரூபித்துக் காட்டுமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சவால் விடுத்துள்ளார்.
பொது நிதிகள் கொள்ளையிடப்பட்டு உகாண்டா மற்றும் சீஷெல்ஸ் உட்பட பல்வேறு நாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்த கூற்றுக்களின் காணொளி காட்சிகளை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, அவற்றை நிருபித்து காட்டுமாறு சவால் விடுத்துள்ளார்.
இது குறித்து நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளதாவது” உகாண்டா மற்றும் பல்வேறு நாடுகளில் பில்லியன் கணக்கான டொலர்களை நாங்கள் பதுக்கி வைத்துள்ளோம் என்று ஜனாதிபதியும் அவரது குழுவும் பல ஆண்டுகளாக குற்றம் சாட்டி வருகின்றனர்.
ஜனாதிபதி தனது குற்றச்சாட்டுகளை நிரூபிக்க வேண்டிய நேரம் இதுவாகும்” இவ்வாறு நாமல் ராஜபக்ஷ பதிவிட்டுள்ளார்.